தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதல் முறையாக வெப் தொடரில் மனோ பாலா! - வெப் தொடரில் மனோ பாலா

சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனக் கலக்கிய மனோபாலா தற்போது வெப் சீரிஸிலும் அடியெடுத்துவைத்துள்ளார்.

manobala
mr uththaman web series

By

Published : Sep 1, 2021, 11:39 AM IST

சென்னை: சினிமாக்களில் பல்வேறுவிதமான வேடங்களில் கலக்கிய இயக்குநர், நடிகர் மனோபாலா தற்போது முதல்முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த ‘சிறைப்பறவை’, ‘எம்புருசன்தான் எனக்கு மட்டும்தான்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, 'கருப்பு நிலா' உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் மனோபாலா.

இதைத்தொடர்ந்து சினிமாக்களில் காமெடி, குணச்சித்திரம் என நானூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல் 'சதுரங்க வேட்டை', ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.

தற்போது மனோ பாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். ‘மிஸ்டர் உத்தமன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கியிருக்கிறார். இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார். இவர் நயன்தாராவுக்குத் தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார்.

யூ-ட்யூப், விளம்பரப் படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இத்தொடரில் மனோபாலா முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காதல், காமெடி, பேண்டஸி கலந்து உருவாகி இருக்கும் இந்த வெப் தொடர் செப்டம்பர் 3ஆம் தேதி ஸ்டே டியூன் என்ற யூ-ட்யூபில் சேனலில் வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: உருவாகிறதா ஜீவி 2?

ABOUT THE AUTHOR

...view details