தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பொன்னியின் செல்வன் படத்தில் இணையும் பிரபல நடிகர் ஜெயராம் - Maniratnams Ponniyin selvan

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடிக்கவுள்ளதாக நடிகர் ஜெயராம் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் இணையும் பிரபல நடிகர் ஜெயராம்

By

Published : Aug 28, 2019, 9:39 AM IST

கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கவுள்ளார். லைகா நிறுவனம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர். இதில் நடிக்கவுள்ளதாக ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டும் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் ஜெயராம் தற்போது இதில் நடிப்பதாக பேட்டியளித்துள்ளார்.

மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயராம் இதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை அதிகம் குறைத்து மிக ஸ்லிம்மாக மாறிய இவரது புகைப்படங்கள் வைரலாக பரவிய நிலையில், இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details