கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க பாப் பாடகி மடோனாவின் கணவர் கய் ரிச்சி, தங்களது விவாகரத்து வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மேன்ஹேட்டன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் கய் ரிச்சி, மடோனா தம்பதியினருக்கு ரோக்கோ, டேவிட் எனும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது குழந்தைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளும், பிரச்னைகளும் நியூயார்க் நீதிமன்றத்தால் மேற்பார்வையிடப்பட்டு வருகிறது.