லாஸ் ஏஞ்சல்ஸ்: 62ஆவது கிராமி விருது நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், விருது வென்றவர்களின் மொத்த பட்டியலை இங்கு காணலாம்.
இசை உலகின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் கிராமி விருதுகளின் 62ஆவது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் கோலாகலமாக நேற்று இரவு நடைபெற்று முடிந்தது.
இதில், ஆண்டின் சிறந்த ஆல்பம், சிறந்த பாடல், சிறந்த புதுமுக கலைஞர் உள்ளிட்ட ஐந்து விருதுகளை பாடகி பில்லி எலிஷ் தட்டிச்சென்றார். சுமார் 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமி விருது வென்றவர்களின் முழு விவரம் பின்வருமாறு:
- சிறந்த ராப் ஆல்பம்
தி கிரேயட்டர் பாடலுக்காக இகோர், டைலர்
- சிறந்த நகைச்சுவை ஆல்பம்
பிரபல நகைச்சுவையாளர் டேவ் சாப்லின், ஸ்டிக்ஸ் அண்ட் ஸ்டோன்ஸ்
- சிறந்த குழு பங்களிப்பு
ஸ்பீச்லெஸ் வீடியோவுக்காக டான் மற்றும் ஷே
- சிறந்த தனி பாப் பாடல்
ட்ரூத் ஹர்ட்ஸ் பாடலுக்காக பாடகி லிஸ்ஸோ
- சிறந்த பாப் குரல் ஆல்பம்
பில்லி எலிஷின் வென் வீ ஆல் ஃபால் ஸ்லீப், வேர் டூ வி கோ?
- சிறந்த பாப் ஜோடி
பில்லி ரே சைரஸ் இடம்பெறும் ஓல்டு டவுன் ரோடு விடியோ
- சிறந்த பாரம்பரிய பாப் குரல் ஆல்பம்
எல்விஸ் கோஸ்டெல்லோ & தி இம்போஸ்டர்ஸ் குழுவினரின் லுக் நவ்
- சிறந்த ஆர்&பி ஆல்பம் (பாப், ரிதம், எலெக்ட்ரானிக் மியூசிக் என அனைத்தும் கலந்த பாடல்)
ஆண்டர்சன் பார்க்கின் வென்ட்யூரா பாடல்
- சிறந்த ஆர்&பி பாடல்
பிஜே மோர்டனின் சே சோ பாடல்
- சிறந்த ஆர்&பி பெர்ஃபாமண்ஸ்
ஆண்டர்சன் பாக்கின் கம் கோம் பாடல்
- சிறந்த பாரம்பரிய ஆர்&பி பெர்ஃபார்மண்ஸ்
பாடகி லிஸ்ஸோவின் ஜோரோம் பாடல்
- சிறந்த நகர்புற தற்கால ஆல்பம்
பாடகி லிஸ்ஸோவின் காஸ் ஐ லவ் யூ
- சிறந்த ராக் பாடல்
கேரி கிளார்க் ஜுனியரின் திஸ் லேண்ட். மேலும் இந்தப் பாடல் சிறந்த ராக் பெர்ஃபார்மெண்ஸ், சிறந்த தற்கால ப்ளூஸ் ஆல்பம் உள்ளிட்ட மேலும் இரு விருதுகளை பெற்றது.
- சிறந்த ராக் ஆல்பம்
கேஜ் தி எலிபோண்ட் குழுவினரின் சோசியல் க்யூஸ்
- சிறந்த பேச்சு சொற்கள் அடங்கிய ஆல்பம்
மிச்செல்லே ஒபாமாவின் பிகம்மிங்
- சிறந்த அமெரிக்க வேர் பெர்ஃபாமென்ஸ்
சாரா பரேல்லஸின் செயின்ட் ஹானஸ்டி
- சிறந்த மாற்று இசை ஆல்பம்
வேம்பையர் வீக்கெண்ட் குழுவின் ஃபாதர் ஆஃப் தி பிரைட்
- ஆண்டின் சிறந்த பாரம்பரியம் அல்லாத இசை தயாரிப்பாளர்
ஃபின்னியஸ்
- சிறந்த இசைப் படம்
பாடகி பியாண்ஸின் ஹோம் கமிங்
- சிறந்த நாட்டுப்புற பாடல் ஆல்பம்
தன்யா டக்கரின் ஒயில் ஐ ஏம் லிவிங்
- சிறந்த நாட்டுப்புற பாடல்
தன்யா டக்கரின் பிரிங் மை ஃபிலவர்ஸ்
- சிறந்த நாட்டுப்புற தனி பெர்ஃபாமென்ஸ்
வில்லி நெல்சனின் ரைட் மீ பேக் ஹோம்
- சிறந்த ராப் பாடல்
ஜே. கோல் தோன்றும் ஏ லாட் (21 சேவேஜ்) பாடல்
- சிறந்த ராப் பெர்ஃபாமென்ஸ்