தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என் பெயரை பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள்' - வதந்திக்கு விளக்கம் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் - latest cinema news

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னைப் பற்றி பரவிவந்த வதந்திக்கு ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

By

Published : Sep 9, 2021, 8:43 AM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே தமிழில் நான்கு சீசன்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகின்றன. அதன்படி இதில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்துகொள்ளப் போவதாகக் கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரைப் பார்க்கிறேன்.

நான் பிக்பாஸ் 5ஆவது சீசனில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எனது பெயரை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள். இதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details