பிரபல பியூட்டி நிபுணர் சமந்தா என்பவரால் இயக்கப்பட்டு வரும் இந்த நிறுவனம், பெண்களின் முன்னேற்றம், உரிமை ஆகியவற்றை முன்னிருத்தி செயல்படும் அமைப்பாகத் திகழ்கிறது. எனவே அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த நன்கொடையை அளித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக தாராளம் காட்டிய ஹாலிவுட் மாடல் - Kylie Jenner donates $750,000
வாஷிங்டன்: பெண்களின் முன்னேற்றத்தை முன்னிருத்தி செயல்பட்டு வரும் அமைப்புக்கு, 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரபல ஹாலிவுட் மாடல் கெய்லி ஜென்னர்.
அமெரிக்க மாடல் கெய்லி ஜென்னர்
அத்துடன், நீங்கள் நினைத்தவாறு அற்புதமான விஷயங்கள் அனைத்தையும் செய்து கொள்ளுமாறு தெரிவித்ததாக கெய்லி கூறினார்.
முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை வெளியிட்ட டாப் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் கெய்லி ஜென்னர் இடம்பிடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கெய்லி ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.