தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதலமைச்சரை நேரில் சந்தித்த 1 கோடி ரூபாய் வின்னர்! - கோடீஸ்வரி நிகழ்ச்சி கௌசல்யா கார்த்திகா

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கௌசல்யா கார்த்திகா வாழ்த்து பெற்றுள்ளார்.

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த 1 கோடி ரூபாய் வின்னர்!
தமிழக முதல்வரை நேரில் சந்தித்த 1 கோடி ரூபாய் வின்னர்!

By

Published : Jan 23, 2020, 9:50 AM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ரசிகைகள் உள்ளனர். ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த கௌசல்யா கார்த்திகா (31) என்பவர் கலந்து கொண்டார்.

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த 1 கோடி ரூபாய் வின்னர்!

காது கேட்க முடியாமல், வாய் பேச முடியாமல் உள்ள, இவர் நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். குரூப் 1 தேர்வு எழுதி, உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறினார்.

கௌசல்யா கார்த்திகா, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி 1 கோடி ரூபாய் வென்று சாதித்துள்ளார். இவரின் வெற்றிக்குப் பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனை நேரில் சந்தித்த 1 கோடி ரூபாய் வின்னர்

இந்த நிலையில் கௌசல்யா கார்த்திகா நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்து, வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியாக பதில் கூறி, 1 கோடி ரூபாய் வென்ற கௌசல்யாவுக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: குறும்படத்தில் இணைந்த கஜோல் - ஸ்ருதிஹாசன்

ABOUT THE AUTHOR

...view details