தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். திரைத்துறை பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் இதில் பங்கு பெறுவது வழக்கம். சலசலப்புக்கும் விறுவிறுப்புக்கும் பெயர் போன இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு இடையே நட்பும் காதலும் மலர்வது வாடிக்கையான ஒன்று.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில் ஓவியா - ஆரவ் இடையே காதல் மலர்ந்து அப்போது ரசிகர்களிடையே அதிகமாகப் பேசப்பட்டது. அதேபோல் மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா இடையே காதல் மலர்ந்து அதிகமாகப் பேசப்பட்டது.
சந்தன் ஷெட்டி இன்ஸ்டாகிராம் இதேபோன்று கன்னடத்தில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி கலந்துகொண்டார். அதே சீசனில் மற்றொரு போட்டியாளராக நிவேதா கவுடாவும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவர்களது நட்பு பின்நாளில் காதலாக மாறியது. இதனையடுத்து இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் தமிழிலும் இது போன்று நட்பாக ஆரம்பித்து காதலாக மாறிய கவின் - லாஸ்லியா ஜோடிகள் திருமணம் செய்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.