பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பால்ட்வினை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த ஜஸ்டின் பீபர், சமூக வலைதளங்களில் தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்களை இன்றுவரை பதிவிடுவது வழக்கம்.
சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பீபரிடம், மனைவி பால்ட்வினுடனான திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் தன் காதலை வெளிப்படுத்தியபோது பால்ட்வின் நிச்சயம் ஒப்புக்கொள்வார் என தனக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய சந்தேகங்கள் எல்லாம் தன்மீதுதான் என்றும் இந்த உறவிற்கு கட்டுப்பட்டும் உண்மையாகவும் தன்னால் இருக்க முடியுமா என்றுதான் அதிகம் யோசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செலினா கோமஸுடன் தீவிர காதலில் இருந்துவந்த ஜஸ்டின் பீபர், ஒருமுறை தன் பழைய காதல் குறித்து யோசித்ததாகவும் ஆனால் பால்ட்வினுடன் மட்டும்தான் தன் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க விரும்பும் உண்மையை உணர்ந்து, இந்த எண்ணங்களிலிருந்து மீண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் செய்துகொண்ட பாப் இசை உலக அரசன் ஜஸ்டின் பீபர்