தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெப் சீரிஸ் தொடருக்கு எதிர்ப்பு

ஜெயலலிதா அனைவரும் அறியும் விதமான பொதுவான அரசியல் வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அப்படி இல்லை. எனது சகோதரி தீபா மற்றும் எனது அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட வாழ்கையை வெளிப்படுத்த நினைப்பவர்கள் உரிய அனுமதி பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அக்கா மகன் தீபக் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

குயின் வெப் சீரிஸ் தொடரில் ரம்யா கிருஷ்ணன்

By

Published : Sep 23, 2019, 5:29 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு குயின் என்ற பெயரில் இயக்குநர் கெளதம் மேனன் வெப் சீரிஸ் தொடரை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடரை தயாரிக்கும் பணியில் இயக்குநர் கெளதம் மேனன் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் குயின் தொடரை தயாரிப்பதற்கு ஆட்சோபனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.

அம்மா என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஒரு அரசியல் பிரபலம். அவரது பொது வாழ்க்கை அனைவரும் அறிந்ததே. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை அப்படியில்லை.

ஜெயலலிதாவின் பொது வாழ்க்கையை வெளிப்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கூறவேண்டுமானால் என்னிடம் அல்லது எனது சகோதரி தீபாவிடம் உரிய அனுமதியை பெற வேண்டும்.

அந்த வகையில் இயக்குநர் ஏ.எல். விஜய், தலைவி படம் எடுப்பதற்கு உரிய அனுமதியை பெற்றுவிட்டார். இயக்குநர் கெளதம் மேனன் என்னிடம் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. எனவே அவர் எடுக்கும் தொடரில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படுத்தினால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்.

தலைவி மேக்கப் டெஸ்டில் நடிகை கங்கனா ரணாவத்

என்னால் கெளதம் மேனனை தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர் விரைவில் எங்களை தொடர்பு கொண்டு பேசுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தொடரில் கிடாரி படப் புகழ் முருகேசன் இணை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜெயலலிதா. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதிவியேற்ற அவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி இறந்தார்.

குயின் வெப் சீரிஸ் தொடர் ஃபஸ்ட் லுக்

இந்த நிலையில், தமிழக அரசியலில் முக்கியமானவராகத் திகழும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'தலைவி' என்ற பெயரில் படம் உருவாகவுள்ளது. பாலிவுட் டாப் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்குகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்துக்கான மேக்கப் டெஸ்ட் புகைப்படங்கள் வெளியாகின. இதனிடையே கடந்த வாரம் குயின் ஃபஸ்ட் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details