தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வாத்தி கம்மிங்' : ரியாலிட்டி ஷோவில் வெறித்தனம் காட்டிய பாலிவுட் பிரபலங்கள் - ரியலிட்டி ஷோவில் வெறித்தனம் காட்டிய ஜாக்கி ஷெராஃப்

பாலிவுட் நட்சத்திரங்களான மாதூரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் ரியாலிட்டி ஷோவில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Master
Master

By

Published : Jul 3, 2021, 11:51 PM IST

விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்த பாடலில் விஜய் தோளை சற்று சரித்து குலுக்கி ஆடும் நடன அசைவு சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பிரபலங்கள், நெட்டிசன்கள் நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட உலகம் முழுவதும் இந்தப் பாடல் கவனத்தை ஈர்த்தது.

இந்தியில் தனியார் தொலைக்காட்சியில் 'டான்ஸ் திவானே 3' என்னும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதன் வார இறுதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் பிரபலங்கள் மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் முன்னோட்டத்தில் மாதுரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாக நடனமாடுகின்றனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சுனில் ஷெட்டி ரஜினியின் 'தர்பார்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், ஜாக்கி ஷெராஃப் விஜய்யின் 'பிகில்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய வார்னர் & கோ!

ABOUT THE AUTHOR

...view details