தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமெரிக்க டிவி ஷோக்களில் அசத்தும் இந்தியர்கள் - hassan minaj

டெல்லி: குனால் நய்யார், லில்லி சிங், மின்டி காலிங் என அநேக இந்திய பிரபலங்கள் அமெரிக்க டிவி ஷோக்களில் அசத்திவருகின்றனர்.

அமெரிக்க டீ.வி ஷோக்களில் அசத்தும் இந்தியர்கள்

By

Published : Apr 9, 2019, 2:00 PM IST

இங்கு சிலவற்றைக் காண்போம்:

  • குனால் நய்யார்: 2007ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தொலைக்காட்சிகளில் 12 சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த மிக பிரபலமான தொடர் 'பிக் பேங் தியரி'. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நடிகர் குனால் நய்யார் - அமெரிக்காவில் பயிலும் இந்திய ஆராய்ச்சி மாணவனகா நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டில் மூன்றாவது அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
    குனால் நய்யார்
  • கல் பென்: ஹரால்ட் என்ட் குமார் என்ற படத்தில் நடித்த கல்- டாக்டர் லாரன்ஸ் கட்நர் என்ற கதாபாத்திரத்தில் ஹவுஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்றார். தற்போது 'சூப்பர்ஹுயூமன்' என்ற புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவை நடத்திவருகிறார்.
    கல் பென்
  • ஹசன் மின்ஹஜ்: அமெரிக்க வாழ் இந்திய நகைச்சுவையாளர் ஹசன், ஹோம் கம்மிங் கிங் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் உலகப் புகழ் பெற்றார். டெய்லி ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் பேட்ரியாட்டிக் ஆக்ட் வித் ஹசன் மினாஜ் என்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கலாய்த்ததற்காக இந்திய நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார்.
    ஹசன் மின்ஹஜ்
  • லில்லி சிங்: கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான இவர் உலகம் முழுவதும் சூப்பர்வுமனாக பிரபலமடைந்துள்ளார். யூடிப் சேனல் மூலம் பிரபலமடைந்த லில்லி சிங், 2017ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலின்படி உலக அளவில் யூ ட்யூபில் அதிக சம்பளம் வாங்கும் சேனல்கள் வரிசையில் லில்லியின் சேனல் 10ஆவது இடத்தில் உள்ளது.
    லில்லி சிங்
  • மின்டி காலிங்: அமெரிக்க இந்தியரான இவர் நடிகை, நகைச்சுவையாளர், எழுத்தாளர் தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவராக திகழ்கிறார். ஆபிஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முதன்முறையாக தோன்றியவர் தற்போது தி மின்டி புராஜெக்ட் என்ற நகைச்சுவை தொடரில் நடித்துவருகிறார்.
    மின்டி காலிங்
  • பத்மா லக்ஷ்மி: சென்னையில் பிறந்தவரான பத்மா லக்ஷ்மி டாப் செஃப் என்னும் பிரபல அமெரிக்க சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன்மூலம் 2009 ஆம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான ஏமி விருதையும் வென்று அசத்தினார்.
    பத்மா லக்ஷ்மி
  • செந்தில் ராமமூர்த்தி: அமெரிக்கத் தமிழரான செந்தில் ராமமூர்த்தி 'ஹீரோ' என்ற தொலைக்காட்சித் தொடரில் மொகிந்தர் சிங்காக நடித்து பிரபலமடைந்தார். மேலும் கிரே அனடாமி, நம்பர் 3, சி.எஸ்.ஐ. மியாமி போன்ற தொடர்களில் நடித்தும் புகழ் பெற்றார்.
    செந்தில் ராமமூர்த்தி

ABOUT THE AUTHOR

...view details