லாஸ் ஏஞ்சல்ஸ்: மதுபாட்டில் திறக்கும்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தனது வலது கண் பார்வையை இழந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் கேம்பெல்.
பிரிட்டனில் ஒளிப்பரப்பாகும் பிரபல ரியாலிட்டி டேட்டிங் டிவி தொடரான 'லவ் ஐலோண்ட்'-இல் பங்குபெறுபவர் நடிகர் தியோ கேம்பல். இவர் ஷாம்பெய்ன் வகை மது பாட்டிலை திறந்தபோது அதன் மூடி எதிர்பாராதவிதமாக கண்களில் தாக்கி காயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அவருக்கு 7 தையல்கள் போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் செஃல்பி எடுத்து விவரம் தெரிவித்துள்ள கேம்பெல், எதிர்பாராத விபத்துக்கு பின் இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது எனது வலது கண்ணின் முழுப் பார்வையும் பறிபோயுள்ளது.
ஒரு ஷாம்பெயின் பாட்டிலின் மூடி என் வாழ்க்கையை இப்படி புரட்டிப்போடும் என நினைத்துப்பார்க்கவில்லை. இருப்பினும் என இடது கண் நல்ல பார்வை திறனுடன் இருப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுபாட்டில் மூடியால் பறிபோன கண் பார்வை - காதலியுடன் செல்பி எடுத்து அறிவித்த ஹாலிவுட் நடிகர் கேம்பெல் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிக்கொண்டாட்டம், விருந்து நிகழ்ச்சிகளில் ஷாம்பெயின் மது பாட்டில்களை குலுக்கி, அதிலிருந்து எழும்பும் நுரையை மற்றவர்கள் மீது தெளிப்பது வாடிக்கையான விஷயம்தான். அந்த வகையில் சாம்பெயின் பாட்டில் குலுக்கி திறக்கும்போது கேம்பெல் விபத்தில் சிக்கியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டில் 'லவ் ஐலோண்ட்' நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களாக பங்கேற்ற தியோ கேம்பேல் - காஸ் கிராஸ்லே தற்போது காதலித்து வருகின்றனர். கேம்பலுக்கு இந்த விபத்து ஏற்பட்டதை கேள்விப்பட்டு கிராஸ்லே அவரை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.