அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தை இயக்கிய அந்தோணி - ஜோ ருஸ்ஸோ சகோதரர்கள் ஹெர்குலஸ் படத்தை உருவாக்கவுள்ளனர். 1997இல் வெளியாகி உலகளவில் சூப்பர் ஹிட்டான ஹெர்குலஸ் படத்தின் ரீமேக்காக லைவ்-ஆக்ஷன் பாணியில் தயாராகவுள்ளது.
மீண்டும் நம்மை மகிழ்விக்க வருகிறான் ‘ஹெர்குலஸ்’ - disney remaking herclues
லாஸ் ஏஞ்சலஸ்: உலக அளவில் சூப்பர் ஹிட்டான ஹெர்குலெல் பேண்டஸி திரைப்படத்தை லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கும் பணிகளை டிஸ்னி நிறுவனம் தொடங்கியுள்ளது.
கிரேக்க புராணங்களில் முக்கிய நாயகனாக பாவிக்கப்பட்ட ஹெர்குலஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் பாணியில் வெளிவந்த இந்தப் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினைரையும் வெகுவாகக் கவர்ந்தது. படத்தை ரான் கிளேமெண்ட்ஸ் மற்றும் ஜான் மஸ்கர் இணைந்து இயக்கியிருந்தனர்.
சூப்பர் ஹிட் அனிமேஷன் படமான தி ஜங்கிள் புக், லைவ்-ஆக்ஷன் பாணியில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த வரிசையில் பல்வேறு அனிமேஷன் திரைப்படங்கள் தற்போது லைவ் ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வருகிறது.