ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிய புகழ்பெற்ற தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' (Game of Thrones). இத்தொடருக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். எட்டு சீசன்களைக் கொண்ட இத்தொடர் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது.
நெட்பிளிக்ஸில் புதிய தொடரை இயக்கும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' இயக்குநர்கள் - got makers scifi series
வாஷிங்டன்: 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர் இயக்குநர்கள் நெட்பிளிக்ஸில் உருவாகவுள்ள புதிய தொடர் ஒன்றை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தொடரானது எம்மி விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. ஜார்ஜ் ஆர்.ஆர் மார்ட்டின் எழுதிய 'எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு எபிசோடுகளையும் ஆலன் டெய்லர், டேவிட் பெனியாப், டி.பி. வெய்ஸ் உள்ளிட்ட 15 பேர் இயக்கியுள்ளனர்.
இதனையடுத்து டேவிட் பெனியாப், டி.பி. வெய்ஸ் இருவரும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கவுள்ள 'தி த்ரீ பாடி ப்ராப்ளம்' என்ற தொடரை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடரானது, பல்வேறு விருதுகளை வென்ற சீன எழுத்தாளர் லியு சிக்சின் எழுதிய நாவலான 'தி த்ரீ பாடி ப்ராப்ளம்', 'தி டார்க் பாரஸ்ட்', 'டெத் அண்ட்' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது.
இத்தொடருக்கான திரைக்கதையை டேவிட் பெனியாப், டி.பி. வெய்ஸ் ஆகியோருடன் இணைந்து 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் சில எபிசோடுகளுக்கு திரைக்கதை எழுதிய அலெக்சாண்டர் வூ என்பவரும் எழுதுகிறார். இந்தத் தொடரை ரியான் ஜான்சன், ராம் பெர்க்மேன், சிக்ஸின், கென் லியு, பிளான் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க உள்ளது.