தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கர்ப்ப காலத்தில் இந்திய மசாலாப் பொருள்களுக்கு அடிமையான பிரிட்டிஷ் பாடகரின் மனைவி! - அமெரிக்க சூப்பர் மாடல் கிகி ஹாடிட்

அமெரிக்க சூப்பர் மாடல் கிகி ஹாடிட், தன் சமையலறையில் இந்திய மசாலாப் பொருள்களை ஜார்களில் அடுக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளது அவரது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிகி ஹாடிட்
கிகி ஹாடிட்

By

Published : Dec 28, 2020, 8:03 PM IST

அமெரிக்காவின் பிரபல மாடல்களுள் ஒருவரும், பிரபல பாப் பாடகர் ஜெய்ன் மாலிக்கின் காதலியுமான கிகி ஹாடிட், சமீபத்தில் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு பெண் குழந்தைப் பிறந்து தற்போது நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தான் கருவுற்றிருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கிகி ஹாடிட் அடிக்கடி பகிர்ந்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன் சமையலையின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தில், கிகியின் சமயலறை ஜார்களில் இந்திய மசாலாப் பொருள்களான கரம் மசாலா, மஞ்சள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் எழுதப்பட்டு வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இது அவரது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டோரியில் புகைப்படங்கள் பகிர்வது தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில், ”செப்டம்பர் 16ஆம் தேதி என்ன செய்தீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ”நான் ஒரு சைக்கோ கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தேன்” எனக் குறும்பாக பதிலளித்து, இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

நவம்பர் 2015ஆம் ஆண்டு பிரபல பிரிட்டிஷ் பாடகர் ஜெய்ன் மாலிக்குடன் காதலில் விழுந்த கிகி ஹாடிட், தொடர்ந்து அவருடன் உறவு முறிவு, காதலை புதுப்பிப்பது என லைம்லைட்டிலேயே இருந்து வந்தார். 2019ஆம் ஆண்டில் இந்த ஜோடி மீண்டும் இணைந்த நிலையில் தற்போது இவர்களுக்கு நான்கு மாத பெண் குழந்தை உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details