லண்டன்: உடல்நிலையை கருத்தில்கொண்டு கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரிலிருந்து தான் நீக்கப்படாலாம் என்று தெரிவித்துள்ளார் நடிகை எமிலா கிளார்க்.
உலக அளவில் புகழ் பெற்ற பேண்டஸி தொடராக திகழும் கேம் ஆஃப் த்ரோன்ஸில் டேனெரிஸ் தார்கர்யன் என்ற கேரக்டரில் காட்டப்பட்டவர் எமிலா கிளார்க். இவர் 2011 மற்றும் 2013ஆம் ஆண்டில் மூளையில் வீக்கம் ஏற்பட்ட உடலநலம் பாதிக்கப்பட்டார்..
இதையடுத்து தற்போது இந்தத் தொடரிலிருந்து தனது கேரக்டர் நீக்கப்படலாம் என அச்சப்படுவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக வலையொளி (போட்காஸ்ட்) நிகழ்ச்சியில் பேசிய இவர், முதல் முறையாக எனது மூளையில் வீக்கம் இருப்பதை அறிந்தவுடன் ரசிகர்களுக்கு தெரிய வேண்டாம் என நினைத்தேன். ஆனால் இதுபற்றி தெரிந்து பலரும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிருந்த நிலையில், மூன்ற வாரம் வரை எதுவும் பதிலளிக்காமல் இருந்தேன்.