செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ‘தி எல்லன் டிஜெனெரஸ்’ நிகழ்ச்சியின் 18ஆவது சீசன் ஒளிபரப்பாகவுள்ளது.
மீண்டும் உங்களை மகிழ்விக்க வருகிறார் எல்லன் டிஜெனெரஸ்
மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை, மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் என எல்லன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து எல்லன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாக்ஸ் நியூஸ் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவதை உறுதி செய்துள்ளது. கரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களின்றி இதன் படப்பிடிப்பு ஸ்டுடியோவில் நடைபெறும். மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை, மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் எல்லனுடன் டிப்பானி ஹாடிஷ் பங்கேற்கவுள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் அலெக் பால்ட்வின், கிரிஸ்ஸி டெய்கன், கெர்ரி வாஷிங்டன் ஆகியோர் இதன் முதல் வாரத்தில் பங்கேற்கின்றனர். கிரிஷ் ராக், ஏமி கம்மர், ஆடம் சாண்ட்லர் மற்றும் ஓர்லாண்டோ ப்ளூம் ஆகியோர் இந்த மாதம் முழுவதும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.