தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ட்ரிபிள் எக்ஸ் 2: சர்ச்சை காட்சிகளை நீக்கிய ஏக்தா கபூர் - ட்ரிபிள் எக்ஸ் 2 வெப் சீரிஸ்

சர்ச்சை எனக் கூறப்பட்ட ட்ரிபிள் எக்ஸ் 2 வெப் சீரிஸ் காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், தொடர் மிரட்டல்கள் தன்னை காயப்படுத்துவதாகக் கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.

Triple X 2 webseries
producer ektha kapoor

By

Published : Jun 8, 2020, 7:47 PM IST

மும்பை: ட்ரிபிள் எக்ஸ் 2 வெப் சீரிஸிலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியுள்ளார் அதன் தயாரிப்பாளரான ஏக்தா கபூர்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது," இந்திய ராணுவத்தினர் மீது தனிப்பட்ட முறையிலும், எங்கள் நிறுவனத்தின் சார்பிலும் மிகுந்த மரியாதை உள்ளது. நம் நாட்டுக்காகவும், குடிமக்களின் பாதுகாப்புக்காகவும் அவர்கள் ஆற்றும் பணி போற்றப்பட வேண்டியது. சர்ச்சை எனக் கூறப்பட்ட காட்சிகளை நாங்கள் ட்ரிபிள் எக்ஸ் 2 தொடரிலிருந்து நீக்கியுள்ளோம். ஆனாலும் தொடர்ந்து எங்களுக்கு வரும் மிரட்டல்கள், கிண்டல் கேலிகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார்.

ட்ரிபிள் எக்ஸ் 2வெப் சீரிஸில் ராணுவ வீரரின் மனைவி, அவர் இல்லாதபோது வேறொருவருடன் தகாத உறவு வைத்துக்கொள்வது போல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் ராணுவ உடை தவறான முத்திரைகளுடன் அணிந்திருப்பதுபோல் காட்டப்பட்டது ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயலாக அமைந்திருப்பதாக முன்னாள் ராணுவ வீரர், யூடியூப் பிரபலம், பாஜக எம்எல்ஏ என, அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராக புகார்கள் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சர்ச்சை காட்சி தொடர்பான எதிர்ப்புகள் வலுக்கவே, குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details