தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிசிறு அடையும் சேரனின் தரம் - வசந்தபாலன் வருத்தம் - இயக்குநர் சேரன்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் இயக்குநர் சேரனின் தரம் பிசிறு அடைகிறது என, இயக்குநர் வசந்தபாலன்  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிசிறு அடையும் சேரனின் தரம் - வசந்தபாலன் வருத்தம்

By

Published : Aug 4, 2019, 2:56 AM IST

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் - 3 என்ற நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்கள் ஆகிய நிலையில், அதில் போட்டியாளராக உள்ள இயக்குநர் சேரின் தற்போதைய நிலைமையை கண்டும், சக போட்டியாளர்களால் அவர் இழக்கும் சுயமரியாதை குறித்தும், வருத்தமுற்ற இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!

உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள். திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும், உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர்கள் மகேந்திரன், பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய...... உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details