தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹஸ்முக் தொடருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி - ஹஸ்முக்

நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஹஸ்முக் தொடருக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹஸ்முக்
ஹஸ்முக்

By

Published : May 5, 2020, 8:46 PM IST


ஹஸ்முக் தொடருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வழக்கறிஞர்களைத் தவறாக சித்தரிக்கும் வகையில் நெட்ஃபிளிக்ளில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஹஸ்முக் தொடர் உள்ளதாகத் தெரிவித்து தடை கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அத்தொடருக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அசுதோஷ் துபே அளித்த இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா தள்ளுபடி செய்துள்ளார். நிகழ்ச்சியை ஒளிபரப்ப நிரந்தர தடை உத்தரவு கோரும் மற்றொரு மனு நிலுவையில் உள்ளது. இந்த மனு ஜூலை மாதம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், நெட்ஃபிளிக்ஸின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சாய்கிருஷ்ணா ராஜகோபால், இந்த நிகழ்ச்சிக்குத் தடை கோருவது, பேச்சு, கருத்து சுதந்திரங்களுக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது எனத் தெரிவித்தார். ஆனால் வழக்கறிஞர்கள் சமுதாயத்தை முழுவதுமாக இழிவுபடுத்துதல் தவறு என்பதை உணர்த்தும் வகையில் பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளதாக எதிர் தரப்பினர் வாதிட்டனர்.

டார்க் காமெடி வகையைச் சேர்ந்த இந்த ஹஸ்முக் தொடரில், வீர் தாஸ், ரன்வீர் ஷோரே, மனோஜ் பவா, அம்ரிதா பாக்சி, சுஹைல் நய்யர், இனாமுல்ஹாக், ராசா முராத் ஆகியோர் நடித்துள்ளனர். நிகில் கோன்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். இது ஏப்ரல் 17ஆம் தேதியன்று இத்தொடர் வெளியானது.

0தையும் படிங்க :501 கிலோ எடையை அசால்ட்டாய் தூக்கிய ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நாயகன்!

ABOUT THE AUTHOR

...view details