தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சீறிப் பாயும் கார்கள்... இத்தாலியில் பாண்ட் நிகழ்த்தும் அதிரடி #NoTimetoDie - டேனியல் கிரேக்

மடேரா தெருக்களில் கார், பைக் என பரபர சேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார் தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரேக்.

சீறிப் பாயும் கார்கள்...இத்தாலியில் பாண்ட் நிகழ்த்தும் அதிரடி

By

Published : Sep 16, 2019, 4:28 PM IST

இத்தாலி நாட்டின் முக்கிய நகரான மடேராவில் ஜேமஸ் பாண்ட் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலக அளவில் புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் 25வது படம், 'நோ டைம் டூ டை' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜமைக்கா, நார்வே, யுகே-விலுள்ள பைன்வுட் ஸ்டூடியோஸ், லண்டன் ஆகிய இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக ராமி மாலெக் நடிக்கிறார்.

இந்த நிலையில், தெற்கு இத்தாலியில் அமைந்துள்ள மடேரா நகரில் கடந்த சில நாட்களாக 'நோ டைம் டூ டை' படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்குள்ள தெருக்களில் கார், பைக் என பரபர சேஸிங் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதில் டேனியல் கிரேக் பங்கேற்று ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் லியா சிதோ, நியோமி ஹாரிஸ், பென் வின்ஷா, ரால்ப் ஃபைன்ஸ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் டேனியல் கிரேக் மற்றும் நடிகை லியா சிதோ

ஸ்பை வேலையை விடுத்து ஜமைக்காவில் அமைதியாக வாழ்ந்து வரும் ஜேம்ஸ் பாண்ட்-ஐ தேடி வரும் சிஐஏ மற்றும பழைய நண்பரின் வேண்டுகோளை ஏற்று கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்கும் பணியில் களமிறங்குகிறார். இதன் பின்னர் வழக்கான அதிரடி ஆக்ஷ்ன், சாகசங்கள், ரொமாண்ஸ் என பாண்ட் படங்களுக்கே உண்டான அனைத்தும் கலந்த கலவையாக 'நோ டைம் டூ டை' படத்தின் கதை அமைந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் யுகே-இல் ஏப்ரல் 3, 2020ஆம் ஆண்டும், அமெரிக்காவில் ஏப்ரல் 8, 2020இல் வெளியாகவுள்ளது.

முன்னதாக, பைன்வுட் ஸ்டூடியோஸில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் படக்குழுவினர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும், ஜமைக்காவில் ஷுட் செய்யப்பட்ட சண்டைக் காட்சி ஒன்றில் பாண்டாக நடித்து வரும் டேனியல் கிரேக் காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details