லாஸ் ஏஞ்சலிஸ்: கிராமி விருதை வென்றால் மேடையில் உள்ளாடையுடன் பெறப்போவதாக பிரபல பாடகி கமிலா கபெல்லோ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இசைகலைஞர்களின் ஆஸ்கர் விருதாக பார்க்கப்படும் கிராமி விருதுகள் 2020இல் சிறந்த பாப் ஜோடி/குழு பிரிவில் பிரபல பாடகர்களான கமிலா கபெல்லோ - ஷான் மெண்டீஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த விருதை வென்றால் மேடைக்கு உள்ளாடையுடன் வந்து விருது பெறப்போவதாக கமிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மிக நீண்ட நாள் நண்பரான மெண்டீஸுடன் இணைந்து இந்த விருதை பெற்றால் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நான் முதன்முதலாக மனதில் நினைத்து பாடல் எழுதிய மெண்டீஸ்தான்.