தமிழ்நாடு

tamil nadu

ஒரே நேரத்தில் கரோனா, நிமோனியா தொற்றுகள் - உயிரிழந்த பிரபல பிரிட்டிஷ் ராப்பர்

கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு பிரபல பிரிட்டிஷ் பாடகர் டி ஒய் உயிரிழந்தார்.

By

Published : May 9, 2020, 12:06 AM IST

Published : May 9, 2020, 12:06 AM IST

டி ஒய் சிஜியோக்
டி ஒய் சிஜியோக்

கரோனா, நிமோனியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டி ஒய் (TY) என அறியப்படும் பிரபல பிரிட்ஷ் ராப்பர் பாடகர் பென் சிஜியோக் நேற்று(மே.7) உயிரிழந்தார். அவருக்கு வயது 47. நைஜீரிய ப்ரிட்டிஷ் கலைஞரான டி ஒய் கடந்த மாதம் முதலே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் நலம் நன்கு தேறி வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கரோனாவிலிருந்து மீள்வதற்கு முன் இடையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், உடல் நலம் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். டி ஒய்யின் இறப்பு, அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1972ஆம் அண்டு பிறந்த டி ஒய், 2001 ஆம் ஆண்டு வெளியான தனது முதல் ஆல்பமான அக்வார்ட் மூலம் பெரும் புகழை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :காஸ்டிங் கோச் குறித்த தகவலை பகிர்ந்த அடா சர்மா

ABOUT THE AUTHOR

...view details