ரசிகர்களால் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ’பிக்பாஸ் 4’ சீசன் நேற்று (அக்.05) முதல் ஒளிபரப்படுகிறது. இதில் ரம்யா பாண்டியன், ரியோ, ரேகா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆட்டம் பட்டம் என்று தொடங்கிய நாளன்றே இந்நிகழ்ச்சியில் தகராறு ஆரம்பமாகியுள்ளது.
ஷிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்! - BiggBoss 4
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளன்றே போட்டியாளர்கள் ஷிவானியை டார்கெட் செய்யும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஷிவானி
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியானது. அதில், நடிகை ஷிவானியை போட்டியாளர்கள் அனைவரும் டார்கெட் செய்யும்படி உள்ளது. ”உனக்கு வயதும், அனுபவமும் இல்லை” என்று சனம் ஷெட்டி கூற, உடனே ஷிவானி சோகமடைகிறார். தொடர்ந்து சம்யுக்தா கார்த்தியும், சுரேஷ் சக்கரவர்த்தியும் அவரை முதல் நாளே ஒதுக்குகின்றனர். இவர்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
இதையும் படிங்க:’வாத்தி கம்மிங்’ - ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய பிக்பாஸ் முதல்நாள்!