பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான, பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்று (அக்.03) முதல் ஒளிப்பரப்பாகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சி வழக்கம்போல் இம்முறையும் 106 நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் முதல் நாளான இன்று(அக்.05) விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விஜய்யின் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடுகின்றனர். முதல் நாள் என்பதால் இவர்களுக்குள் எந்த தகராறும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.