தமிழ் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நாண்கு சீசன்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் இன்று (அக்.03) முதல் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்களும் முன்னதாக வெளியாகி வந்தன. அப்படி வெளியான முதல் புரோமோவில் பிக் பாஸ் சீசன் 5 லோகோவை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து முன்னதாக வெளியான புரோமோவில் போட்டியாளாரை காட்டுவது போல் காட்டிவிட்டு, பிறகு கமல் ஹாசன் ”ஐ... காட்டிருவோமா... வாங்க, வந்து பாருங்க... இன்று மாலை 6 மணிக்கு” என்று கூறியுள்ளார்.
மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சி, இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?