தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக்பாஸ் மஹத்துக்கு கல்யாணமா? - மஹத்துக்கும் ப்ராச்சி மிஸ்ராவுக்கும் திருமணம் நிச்சயம்

நடிகர் மஹத்துக்கும் அவர் காதலியான ப்ராச்சி மிஸ்ராவுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

biggboss fame mahat and girlfriend Prachi mishra to get married
biggboss fame mahat and girlfriend Prachi mishra to get married

By

Published : Jan 20, 2020, 1:09 PM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி வெறும் நூறு நாள்களே ஒளிபரப்பானாலும் பல தரப்பிலிருந்தும் கவனம் ஈர்த்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் சொற்ப நாள்களில் வெளியேறினாலும் மக்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் ஒரு சேர பெற்றார்கள்.

அப்படி வெளியாகி கலப்படமான விமர்சனங்களைப் பெற்ற நடிகர் தான் மஹத். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மஹத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் ஹீரோவாகவும் நடிக்கத்தொடங்கினார்.

பிக்பாஸ் வீட்டிலிருக்கும்போதே மஹத், தான் ப்ராச்சி என்னும் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற பெண்ணைக் காதலிப்பதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயம் ஆனது. அதையடுத்து திரைப்படங்களில் பிஸியான மஹத் திருமணம் குறித்து அறிவிப்பு விடாமலிருந்தார். இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் மஹத்துக்கும் ப்ராச்சிக்கும் திருமணம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மஹத்- ப்ராச்சி மிஸ்ரா

திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களை மட்டுமே இரு வீட்டாரும் அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதையும் படிங்க: 'வாட் ஏ மேன்'- மாநாடுக்குத் தயாராகும் சிம்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details