தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BB Day 53 - எல்லைமீறிய சண்டை... பொருள்களை உடைத்த அக்ஷரா - பிக்பாஸ்

பிக்பாஸ் நேற்றைய (நவம்பர் 24) நிகழ்ச்சி முழுவதும் அக்ஷரா, சிபியின் சண்டை மட்டுமே இருந்ததால், பார்வையாளர்கள் சற்று கடுப்பானார்கள் என்றே சொல்லாம்.

அக்ஷரா
அக்ஷரா

By

Published : Nov 25, 2021, 2:55 PM IST

செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வுகளோடு பிக்பாஸ் நேற்றைய (நவ.24) நிகழ்ச்சி தொடங்கியது. அக்ஷரா, இமான் டைனிங் பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றார் வார்டன் சிபி.

அவர் வெளியே சொல்லிக்கொண்டிருந்த இந்த கேப்பில், தாமரை, நீரூப் தலையணைகளை எடுத்துத் தூக்கிப் போட்டு படுக்கை அறையை இரண்டாக மாற்றினர்.

ஐக்கியின் சேட்டை

ஐக்கி தனது முடியைக் கருப்பு நிறமாக மாற்றச் சொல்லிய காரணத்தினால் செம கடுப்பில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்பதற்காகச் சிபி, ராஜு முஞ்சில் ஸ்கேட்ச்சால் கிறுக்கிவிட்டார்.

பள்ளி வாரம் என்பதால், அக்ஷரா வழக்கம் போல் உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதுடன் காலைப் பொழுது தொடங்கியது. வார்டன் தொல்லை தாங்க முடியாத காரணத்தினால், பாவனி அவரின் குச்சியை எடுத்து உண்மையான மாணவி போல் நடந்து கொண்டார்.

அக்ஷராவைப் பழிவாங்கிய சிபி

அக்ஷராவிற்குத் தமிழ் தெரியாத என்று தெரிந்து கொண்டே சிபி அவரை திருக்குறள் கற்றுக்கொண்ட பிறகு சொல்லுமாறு கேட்டார். இதனால் கடுப்பான அக்ஷரா தான் எழுதிப் படித்தால் மட்டுமே கற்றுக்கொள்வேன் என அடம்பிடித்தார். தனது ஆடையை அயர்ன் செய்யவிடாத காரணத்தினால் கடுப்பான அக்ஷரா பொருள்களை உடைத்தார். சமாதானம் செய்ய சென்றவர்களையும் அவர் சாடியாதல் யாரும் அவர் பக்கம் செல்லாமலிருந்தனர்.

மேலும், "நான் இங்கே அடிமையாக இருக்க வரவில்லை. 24 மணி நேரமும் மண்டையில் சிபி அமர்ந்து இருக்கிறார். அவன் யார் என்னைச் சொல்வது. எனக்குத் திருக்குறள் வரவில்லை, சில நேரம் எடுக்கும் நான் படிப்பதற்கு. ரொம்ப பண்ணாதீங்க. நீ என்னிடம் பேசாதே" என கடுப்பில் வீட்டையே இரண்டாகப் பிளப்பது போல் கத்தினார். அவர் பாத்ரூமை வீட்டு வெளியே வாராத காரணத்தினால் பிக்பாஸ், அக்ஷராவை கூப்பிட்டுப் பாடம் எடுத்து அனுப்பினார்.

டாஸ்க்கிலிருந்து விலகிய அக்ஷரா

வழக்கம் போல் கண்ணீர் வடித்த முகத்துடன் இன்றைய டாஸ்க் முழுவதும் செய்யாமல் விலகியே இருந்தார் அக்ஷரா. இவர் வரவில்லை என்றால் என்ன நம்ப போகலாம் வாங்க என்று அனைவரும் பாடம் கற்றுக்கொள்ளக் கிளம்பிவிட்டனர்.

அக்ஷரா வெளியே அழுதுக் கொண்டு இருக்க, பெண்கள் கும்பல் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் ஆட்டம் பட்டத்துடன் விளையாடிக் கொண்டிருந்தது பார்வையாளர்களைச் சற்று கடுப்பேற்றியது.

இதையும் படிங்க:BB Day 52: சேட்டை செய்த பிரியங்கா... திணறிய சிபி

ABOUT THE AUTHOR

...view details