தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

16 போட்டியாளர்களுடன் கலக்கலாகத் தொடங்கிய 'பிக்பாஸ் 4' - biggboss 4 tamil

முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று (அக்.04) முதல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த மூன்று சீசன்களைப் போல் இம்முறையும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். யார் யார் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறித்தும் அவரது பயோடேட்டா என்ன என்பது குறித்தும் அறிந்துகொள்வோம்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

By

Published : Oct 5, 2020, 8:09 AM IST

ரம்யா பாண்டியன்:

ரம்யா பாண்டியன்

வீட்டு மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மூலம் பிரபலமானவர், நடிகை ரம்யா பாண்டியன். முன்னதாக இயக்குநர் ராஜூமுருகனின் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது.

சம்யுக்தா கார்த்திக்:

சம்யுக்தா கார்த்திக்

டிவி நடிகை, மாடல், ஊட்டச்சத்து நிபுணர், சிவில் இன்ஜினியர் என்று பன்முகத் திறமைகொண்டவர், சம்யுக்தா கார்த்திக். இவர் பிக்பாஸ் இல்லத்தில் 14ஆவது போட்டியாளராக நழைந்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா:

நிஷா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்னணி நகைச்சுவை பிரபலங்களுள் ஒருவர், அறந்தாங்கி நிஷா. தவிர, பட்டிமன்ற பேச்சாளராகவும் தொகுப்பாளராகவும் வலம்வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

கேப்ரில்லா:

கேப்ரில்லா

'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், கேப்ரில்லா. அதைத்தொடர்ந்து இவர் '3' படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதா சம்பத்:

அனிதா

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருபவர், அனிதா சம்பத். கடந்த முறை லாஸ்லியா செய்தி வாசிப்பாளராகப் பங்கேற்ற நிலையில் இம்முறை அனிதா சம்பத்தை களமிறக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேகா:

ரேகா

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளவர், நடிகை ரேகா. இவர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கடைசியாக கலந்துகொண்டார்.

பாலாஜி முருகதாஸ்:

பாலாஜி

2017ஆம் ஆண்டு 'மிஸ்டர் பெர்ஃபெக்ட்' பட்டத்தை வென்றவர், பாலாஜி முருகதாஸ். இதுவரை ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக 'டைசன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

சனம் ஷெட்டி:

சனம்

மாடல் அழகியான சனம் ஷெட்டி 2016ஆம் ஆண்டு 'மிஸ் சவுத் இந்தியா' பட்டத்தினை வென்றுள்ளார். தொடர்ந்து 'அம்புலி' படத்தில் இவர் நடித்தார். மேலும் இவரும் பிக்பாஸ் 2வில் கலந்துகொண்ட தர்ஷனும் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ரியோ ராஜ்:

ரியோ

தொகுப்பாளராக இருந்து பின்பு நடிகராக மாறியுள்ளவர், ரியோ ராஜ். இவர் நடிப்பில் தற்போது 'பிளான் பண்ணி பண்ணனும்’ படம் உருவாகி வருகிறது.

ஜித்தன் ரமேஷ்:

ரமேஷ்

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகன் 'ஜித்தன் ரமேஷ்'. ஜித்தன் படத்தில் நடித்ததையடுத்து இவரை அனைவரும் ஜித்தன் ரமேஷ் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

சுரேஷ் சக்கரவர்த்தி:

சுரேஷ்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ரெஸ்டாரென்ட் நடத்தி வருபவர், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் 'அழகன்' உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

பாடகர் வேல்முருகன்:

வேல்முருகன்

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியவர், பாடகர் வேல்முருகன். நாட்டுப்புற பாடல் பாடுவதில் வல்லவராகத் திகழ்கிறார்.

ஷிவானி நாராயணன்:

ஷிவானி

'பகல் நிலவு', 'இரட்டை ரோஜா' உள்ளிட்ட தொடர்களில் நடித்துப் பிரபலமானவர், நடிகை ஷிவானி நாராயணன். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடும் ஷிவானியை, இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர்.

ஆரி அர்ஜுனா

ஆரி

நடிகராக மட்டுமின்றி ஜல்லிக்கட்டுப் போராட்டம், சென்னை பெருவெள்ளத்தின்போது பல்வேறு உதவிகள் என முழு சமூக ஆர்வலராக இயங்கியவர், ஆரி அர்ஜூனா. இவர் தற்போது பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சோம் சேகர்:

சோம்

மாடலிங், ஆல்பம் பாடல்கள் ஆகியவற்றில் நடித்துள்ளவர், சோம் சேகர். இவர் குத்துச்சண்டை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஜித்:

ஆஜித்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை வென்றவர் ஆஜித். ஏராளமான பாடல்கள் பாடியுள்ள இவர் பிக்பாஸ் வீட்டில் 16ஆவது போட்டியாளராக நுழைந்துள்ளார்.

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் இந்நிகழ்ச்சி இம்முறை கரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. மேலும் இம்முறை விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் பலர், அதில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details