தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BB Day 57: காரசாரமான விவாதம் - வெளியேறிய ஐக்கி - நடிகை ரம்யா கிருஷ்ணன்

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் நேற்றைய எபிசோடிலிருந்து ஐக்கி வெளியேறினார்.

ஐக்கி
ஐக்கி

By

Published : Nov 29, 2021, 2:53 PM IST

கமல் ஹாசன் மருத்துவமனையில் இருப்பதால் ரம்யா கிருஷ்ணன் இரண்டாவது நாளாக நிகழ்ச்சியை நேற்று (நவம்பர் 28) தொகுத்து வழங்கினார். கறுப்புச் சேலையில் ரம்யா அசத்தலாக என்ட்ரி கொடுத்தார். போட்டியாளர்களுக்கு மட்டுமில்ல; பார்வையாளர்கள் நமக்கே எங்கே இருந்து இதை வாங்கியிருப்பார் எனத் தோன்றவைத்தது.

எடுத்தவுடன் பிரியங்கா, நிரூப்பை உங்கள் நட்பு உண்மையா அல்லது பொய்யா என ரம்யா கிருஷ்ணன் கேள்வி கேட்டார். இதற்குப் பிரியங்கா, 'டாஸ்க் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் நாங்கள் நண்பர்கள்' என்றார்.

ரம்யா கிருஷ்ணன்

தாமரையிடம் கேப்டன் டாஸ்கில் என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பினார் ரம்யா. "பிரியங்கா செய்த செயலால் எனக்கு இப்போதுதான் அனைத்தும் புரிந்தது. இந்த நிகழ்ச்சி எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளது. என்னை அவர் தகுதியில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார் தாமரை.

ரம்யா கிருஷ்ணன்

இதற்குப் பதிலளித்த பிரியங்கா, "அவள் வீட்டைத் தனி ஆளாகப் பார்த்துக் கொள்வார். ஆனால் அவர் தலைவரானாலும் சண்டை போட்டவர்களிடம் பேசாமல் இருப்பது சரியில்லை. அவர் மனசுல இருக்கும் குழப்பங்கள் தீர்ந்த பிறகு கேப்டனால் சரியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இறுதியில் தாமரை நல்லா பேசுறீங்க என ரம்யா சொன்னதும், பிரியங்காவின் முகம் மாறிவிட்டது.

பிரியங்கா - தாமரை

ABCF டாஸ்க்

புதிதாக வந்திருக்கும் சஞ்சீவை வம்பில் மாட்டிவிடும் வகையில் ABCF டாஸ்க், கிரேடுகளை வழங்குமாறு தெரிவித்தனர்.

F - Fail

  • நிரூப்
  • அபிஷேக்
  • அக்ஷரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிரேடுகளை வழங்கினார் சஞ்சீவ். இதை முடித்தவுடன் அடுத்த டாஸ்க் போகலாமா என ரம்யா கேட்க உடனே சஞ்சீவ் அலறி அய்யோ ஆள விடுங்க டா சாமி எனச் சிரித்தார்.
    காரசாரமான விவாதம்

கர்மா சும்மா விடுமா?

திருக்குறள் எழுதிய தாளை இமானை எடுத்துவரச் சொன்ன ரம்யா, இதை வார்டன், ஆசிரியர்கள் ஐந்து நிமிடத்தில் சொல்ல வேண்டும் என்றார். 'இந்தக் காகிதத்தை விழுங்கினால் கூடச் சொல்லத் தெரியாது' என்று அபிஷேக் சொன்னது அழகாக இருந்தது.

ஐந்து நிமிடத்தின் யாருமே ஒன்றுகூட சரியாகச் சொல்லவில்லை. கர்மா சும்மா விடுமா என்பதுபோல அக்ஷராவை அழைத்து அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு ரம்யா கூறினார். அடித்ததது லக் என நினைத்த தனக்கு கொடுத்த தண்டனை போலவே அவர்களை வெளியே தூங்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தார்.

வெளியேறிய ஐக்கி

நிரூப் என ஆரம்பித்த ரம்யா கடைசியில் ஐக்கி என்று கார்ட் காண்பித்தார். இதை ஏற்கனவே எதிர்பார்த்ததுபோல் அவர் ராம் பாடல் பாடிக்கொண்டே வெளியேறினார்.

இதையும் படிங்க:BB Day 53 - எல்லைமீறிய சண்டை... பொருள்களை உடைத்த அக்ஷரா

ABOUT THE AUTHOR

...view details