சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து 'நட்புனா என்னானு தெரியுமா' படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்த இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இதனால் மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரபல ஆங்கில நாளிதழ், 2019-இல் தொலைக்காட்சியில் மக்களால் அதிகமாக விரும்பப்பட்ட டாப் 20 நபரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் அவர்களுக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மக்களால் அதிகமாக விரும்பப்பட்ட நடிகர் என்ற பட்டியலில் கவின் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின் ராவ் மற்றும் நான்காவது இடத்தில் தர்ஷன் ஆகியோர் உள்ளனர்.
இது குறித்து கவின், 'என்னுடைய பெயரை இந்த பட்டியலில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை பற்றி என்னிடம் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. என் நண்பர்கள் என்னிடம் விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.