விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விரைவாகப் பிரபலமடைவதால், பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.
மீண்டும் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் - bigg boss jodigal
பிக்பாஸ் போட்டியாளர்கள் இணைந்து ஜோடிகள் என்று புது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கின்றனர்.
பிக் பாஸ் போட்டியாளர்கள்
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் ஜோடிகள் என்று புது நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்படவுள்ளது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைச் சேர்ந்த போட்டியாளர்களான சாண்டி, வனிதா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும்,
- ஆஜித் - கேபி
- சோம் - ஷிவானி
- ஷாரிக்,வனிதா, சம்யுக்தா
- நிஷா- தாடி பாலாஜி ஆகியோர் ஜோடிகளாகப் பங்கேற்றுள்ளனர்.