தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’சத்தியமா நான் சொல்லுறேன்டி’... வெளியானது பிக் பாஸ் வின்னரின் ஆல்பம் பாடல்! - பிக்பாஸ் முகென்

பிக்பாஸ் வின்னர் முகென் ராவ் எழுதி, பாடியுள்ள ’சத்தியமா நான் சொல்லுறேன்டி’ பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது.

த்தியமா நான் சொல்லுறண்டி
த்தியமா நான் சொல்லுறண்டி

By

Published : May 2, 2020, 12:17 PM IST

Updated : May 2, 2020, 12:58 PM IST

மலேசியா நாட்டைச் சேர்ந்த முகென் ராவ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். நிகழ்ச்சி தொடங்கிய புதிதில் மக்கள் மனதில் இடம்பிடிக்காத இவர், ஒரே ஒரு பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டார்.

இந்நிலையில், 'சத்தியமா நான் சொல்லுறேன்டி’ என்று தொடங்கும் பாடலை எழுதிய அவர், அதை பிக் பாஸ் வீட்டிற்குள் பாடி இளம் ரசிகர்களைக் கவர்ந்தார்.

மேலும் நேர்மையான குணம், விடா முயற்சி ஆகியவற்றால் ’பிக் பாஸ்’ வின்னர் பட்டத்தையும் அவர் தட்டிச்சென்றார். இதையடுத்து முகென் ரசிகர்கள் , ’சத்தியமா நான் சொல்லுறேன்டி’ முழு பாடல் எப்போதுவெளியாகும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இப்பாடல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முகென் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ’சத்தியமா நான் சொல்லுறேன்டி’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஆர்ட் பேஸ் வீடியோவாக வெளியாகியுள்ள இதில் முகெனும், அவரது காதலி யாஸ்மின் நதியாவும் தோன்றுகின்றனர்.

இதையும் படிங்க:அஜித் பிறந்தநாள்: வாழ்த்திய திரைப்பிரபலங்கள்

Last Updated : May 2, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details