சென்னை: 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், ரசிகர்களுடன் தனது பொன்னான நேரத்தை செலவிட்டுள்ளார் லொஸ்லியா.
இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா மாரிநேசன் 'பிக் பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
சீசன் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் வசித்து வந்த அவர், இறுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். நிகழ்ச்சியின் போது இவருக்கும், சக போட்டியாளர் கவினுக்கு நெருக்கம் ஏற்பட்ட நிலையில் காதல் பூத்ததாக கூறப்பட்டது. மேலும் இவர்களது நெருக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் நீடிக்கும் என எதிர்பார்ப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 'பிக் பாஸ் 3' முடிவுற்ற நிலையில் வெற்றியாளராக முகேன் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களை சந்திக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.
இதனிடையே, தனது ரசிகர்களுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டுள்ளார் லொஸ்லியா. தளபதி விஜய் நடித்த 'சச்சின்' படத்தில் இடம்பெறும் 'வாடி வாடி' என்ற குத்துப்பாடலுக்கு ரசிகர்களுடன் இணைந்து நடனம் ஆடுய வீடியோவை லொஸ்லியா வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் காலையில் ஒலிக்கப்படும் வேக்-அப் பாடலில் தவறாமல் நடனமாடி அனைவரையும் ஈர்த்தார். இதையடுத்து தற்போது ரசிகர்களோடு சேர்ந்து கலக்கியுள்ளார்.