நெசவாளர்களின் திறமைகளையும், வணிகத்தையும் பரப்பும் நோக்கத்தில் சிகாகோ சென்றதாக பிக்பாஸ்(bigg boss season 5) செட்டிற்குள் நுழைந்தார் பிக்பாஸ். அகம் டிவி வழியே சென்ற கமல்ஹாசன், கண்ணாடி டாஸ்க்கில் விட்டுப்போன காம்பினேஷனை ஒன்று சேர்த்து வழக்கம் போல் தான் கொளுத்திப் போடும் வேலையைச் செய்தார்.
பாவனி பேய் பொம்மையா???
முதல் ஜோடியாக சென்ற ராஜு, பாவனியை நோக்கி, "நாணயம் டாஸ்க்கில் சுருதியை மட்டும் மாட்டிவிட்டது தவறாகத் தெரிந்தது. ஆளுமை கிடைத்தபோது தாமரையை வேண்டும் என்றே கூட வைத்துவிட்டு அவருக்குத் தண்டனை கொடுத்தது தவறு. அதனால இது உண்மையா, பேய் பொம்மையா’னு பயந்தேன்" என்றார்.
(பெய் பொம்மையா செல்லக்குட்டி நாளுக்கு நாள் க்யூட் ஆகிட்டே போறாங்க, இவர்கள் இப்படி செல்றீங்களா என நம்மை ஒருமுறை யோசிக்க வைத்திருக்கும்). இதனைக் கேட்டவுடன், 'கவனித்திருக்கிறார்களா... இங்கேயும் தாமரை தான் பேசுபொருளாக மாறியுள்ளார்' என்றார்.
ராஜு குத்திய ஊசி வலித்ததா என கேட்டதற்குப் பாவனி, "சொன்ன அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தாமரையோடு உணர்வுக்கு வேண்டுமானால் மரியாதை கொடுக்கிறேன்" என்றார்.
இசையின் பிம்பமாக இமான்
இமானை அழைத்த கமல், இசையின் பிம்பமாக பேசும்படி தெரிவித்தார். "இங்கு இருக்கும் நபர்களில் எனது நகைச்சுவைக்குச் சிரித்த முதல் நபர் நீ. ஆனா உனக்கு ஒரு கருத்து சொல்லும்போது அதை நீ சரியாக புரிந்து கொள்கிறாயா என்று எனக்குத் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒரு மாதிரியும், செவ்வாய்க்கிழமை ஒருவிதமாக நடந்து கொள்கிறாய். முடிவெடுக்கும் விஷயங்களில் நீ நிறைய தடுமாரி சென்றது போல் இருக்கிறது" என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த இசைவாணி, "என்னை பேசவிடுவதே இல்லை. நான் சொல்வதை இங்கே காது கொடுத்து, கேட்பதே இல்லை. சின்னப்பொண்ணு என்று அனைவரும் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்" எனக் கூறினார்.
வெளியேறிய இசைவாணி
'பிக்பாஸ் வீட்டில் பாலின வித்தியாசமோ, வயது வித்தியாசமோ கிடையாது என்றார் கமல். ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்த கமல், நாமினேஷனில் இருக்கும் எட்டு பேரில் யார் யார் காப்பாற்றப்படுவார்கள் என அபிஷேக்கை அழைத்துக் கேட்டார். இதில் சிலரது பெயர்களை அபிஷேக் தவறாகச் சொல்ல உடனே, அவரை கமல் அவருக்கு பல்பு கொடுத்தார். (அபிஷேக் மைண்ட் வாய்ஸ்: என்ன கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்க)
முதல் கட்டமாக சிபி, அபினய், அக்ஷரா, இமான், தாமரை நிரூப் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்தார் கமல்ஹாசன். இறுதியாக ஐக்கி, இசை மட்டும் இருந்த நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குச் சென்றார் கமல்.
அந்த இடைவெளியில் இசைவாணி தன்னிடமிருந்த நெருப்பு ஆற்றல் காயினை உடனே அபினையை அழைத்து கொடுத்தார். பிறகு இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டதாக அறிவித்தார் கமல். இந்த முடிவு எனக்கு ஏற்கனவே தெரியும் என்ற படி மிகவும் சந்தோஷமாக இசைவாணி வெளியேறினார்.