பிக்பாஸ் (Bigg Boss) ஐந்தாவது சீசன் தொடங்கி சண்டை சச்சரவுகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சுமார் 40 நாள்களுக்குப் பிறகுதான் நிகழ்ச்சியில் சூடுபிடித்திருக்கிறது என்றே சொல்லாம்.
'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்று தமிழ் பழமொழி இருக்கிறது. அந்தப் பழமொழிபோல் போட்டியாளர்களிடையே ஏற்படும் சண்டைகளைத் தன் பக்கம் சாதகமாக மாற்றி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள வேண்டும் என பிக்பாஸ் நினைத்துவிட்டார்போல. ஏனென்றால் அவர் கொடுக்கும் டாஸ்க் அனைத்தும் போட்டியாளர்களிடையே சண்டை மூட்டிவிடுவதுபோல் உள்ளது.
அதுபோன்று தான் நேற்றைய (நவம்பர் 16) நிழல் பிம்ப டாஸ்க் அமைந்திருந்தது. பரம்பர எதிரிகள்போல் நடந்துகொள்ளும் நிரூப் - அபினய், இசைவாணி - இமான், அக்ஷரா - சிபியை மோதவைத்தார் பிக்பாஸ். பாவனி- ராஜு, ஐக்கி - வருண் பிரியங்கா (Priyanka) – தாமரை ஒரு அணியாக இருந்தனர்.
எதிரிகளைக் கோத்துவிட்ட பிக்பாஸ்
பரம்பர எதிரிகளாக இருக்கும் இருவரைச் சேர்த்துவிட்டு ஒருவரைபோல் மற்றவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றார் பிக்பாஸ். மேலும் கண்ணாடி முன்பு நின்றுகொள்வதுபோல் நினைத்துக்கொண்டு தன் எதிரே நிற்கும் நபரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் கூறினார். மேலும் சமாளிக்க முடியாமல் போட்டியிலிருந்து விலக நினைப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பேட்ஜை கழற்றிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அபினய் பொறாமை கொண்டவரா?
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டு குளீர் காய நினைத்தார் பிக்பாஸ். அவர் நினைத்தது சரியாக நடந்தது என்றே சொல்லலாம். நீருப்பை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அபினய் அவர் வளர்த்துவந்த, முடியை நறுக்கவைத்தார். இதனால் கடுப்பான நீருப், அபினய் ஒரு பொய்யான மனிதர், பொறாமைகொண்டவர் என வாய்க்குவந்ததை எல்லாம் பேசினார். இதனால் வீடு இரண்டாக மாறியது.