தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BB DAY 24: நாணயம் ஆட்டைய போட்ட சுருதியை வேட்டையாடிய தாமரை - biggboss 5

பிக்பாஸ் நேற்றைய (அக்.26) எபிசோட்டில் நாணயம் திருடிய சுருதியை தாமரை கடுமையாக சாடி, தனது இன்னொரு முகத்தை காண்பித்துள்ளார்.

சுருதியை வேட்டையாடிய தாமரை
சுருதியை வேட்டையாடிய தாமரை

By

Published : Oct 27, 2021, 2:19 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிய நாள் முதல் பெரிதாகச் சண்டை எதுவும் இல்லாததால், நிகழ்ச்சி மிகவும் டல்லாக சென்றது. எப்போது தான் சண்டை வெடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த நிகழ்வு நேற்றைய (அக்.26) பிக்பாஸ் எபிசோட்டில் அரங்கேறியது. இதற்கு தானே நானும் ஆசைப்பட்டேன் என பிக்பாஸும் வாய் திறக்காமல் சண்டையை ரசித்து கொண்டிருந்தார்.

இந்த வாரம் நெருப்பு வாரம் என்பதால் 'நெருப்பு டா நெருங்கு டா' வேக் அப் பாடலுடன் நாள் தொடங்கியது. சரி வாங்க மக்களே மெயின் சம்பவத்திற்குள்ளே போகலாம்

நாணயத்தை லாவிய சுருதி

தாமரை காலையில் குளித்து முடித்துவிட்டு உடை மாற்றும் அறையில் தனது நாணயத்தைக் கீழே வைத்துள்ளார். இதனைக் கண்ட சுருதி, பாவனியிடம், 'நீ தாமரையை திசை திருப்பினால் நான் நாணயத்தை எடுத்துக் கொள்வேன்' என்றார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த பாவனி, பிறகு இதற்கு உதவ முன்வந்தார்.

மதுமிதா - பாவனி

பாவனி, தாமரைக்குத் துண்டு பிடித்துக் கொள்ளும் இடைவெளியில் சுருதி கீழே இருந்த நாணயத்தை எடுத்து கேமராவில் காண்பித்துள்ளார். இதனை அறிந்த தாமரை, 'ஏன் என்னுடைய நாணயத்தை எடுத்த. அந்த நிலைமையில் இருந்தபோது எதற்காக எடுத்த.' என சுருதியிடம் வாக்குவாதம் செய்தார்.

மேலும் 'உன் வளர்ப்பு சரியில்ல. துரோகம் செஞ்சிட்ட' என தாமரை பேசியதாகச் சுருதி அழுத புரொமோ வீடியோ வெளியானது. ஆனால் அது நிகழ்ச்சியில் காண்பிக்கவில்லை.

ஆர்பாட்டம் செய்த தாமரை

தன்னுடைய நாணயம் திருடப்பட்டு விட்டதால், அழுது தாமரை ஆர்ப்பாட்டம் செய்து அந்த வீட்டையே இரண்டாக மாற்றிவிட்டார். ஏற்கனவே சுருதி, தாமரையின் நாணயத்தைத் திருடுவேன் என பலமுறை அவரிடமே சொல்லியுள்ளார். அப்படி இருக்கையில் சுருதியைக் குறை சொல்வது நியாயமாக இல்லை என்கின்றனர் பார்வையாளர்கள்.

பாவனி - தாமரை

தொடர்ந்து தாமரை குறை சொல்வதை தாங்கி கொள்ளமுடியாமல் பாவனி, சுருதியிடம், 'இந்த நாணயம் வேண்டாம். நீ கொண்டு சென்று கொடுத்துவிடு' என்றார். ஆனால் சுருதி நாணயத்தை கொடுத்தால், தான் தவறு செய்ததது போல் ஆகிவிடும் என மறுத்துவிட்டார்.

சுருதி - பாவனி

அண்ணாச்சியை சாடிய இசைவாணி

இமான் அண்ணாச்சி மீது இசைவாணி செம கடுப்பில் இருக்கிறார் என்பது சீசன் ஐந்து தொடங்கிய நாள் முதல் நமக்கு தெரிந்த ஒன்றே. எப்போதும் இருவரும் எலியும், பூனையாக வீட்டில் சுற்றி வருகின்றனர். சமையல் அணியில் இருக்கும் இமான் அண்ணாச்சி சரியாக வேலை செய்யவில்லை என கூறி இசை வாணி சாடினார்.

பாவனி, சுருதியை டார்கெட் செய்த கேங்

பிக்பாஸ்

ஏற்கனவே இவர்கள் கேங்காக சேர்ந்த புரம் பேசிவருகின்றனர். அப்படி இருக்கும் சூழலில் தாமரைக்கு ஆதரவாக ராஜு, ஐக்கி, இமான் ஆகியோர் குரல் கொடுத்தனர். தங்களை டார்கெட் செய்வதை உணர்ந்த பாவனி, சுருதி கதறி அழுதனர். இதனால் தலைவராக இந்த வாரம் இருக்கும் மதுமிதா பாவனி, சுருதிக்கு ஆதரவாக அவர்களுடன் நிற்கிறார்.

யார் செய்ததது சரி

நாணயம் திருடப்பட்டது பிரச்சினையா அல்லது எடுக்கப்பட்ட இடம் பிரச்சினையா என்ற இரண்டு தலைப்பில் வீட்டில் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்பினார் தெரியவரும் இதற்கான தீர்வு.

அதுமட்டுமின்றி ஒரு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு பாசம் வைத்தேன் அதனால் என்னிடம் இருக்கும் நாணயத்தை எடுக்கக் கூடாது எனத் தாமரை கேட்பது சரியாக இல்லை. இதை அவரே புரிந்து கொண்டால் மட்டுமே வரும் வாரங்களின் டாஸ்க்கை செய்ய முடியும்.

நகரம் - கிராமம் டாஸ்க்

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பழைய புளித்துப் போன நகரம் - கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. நடுவராக இசைவாணியும், நகரத்திற்குத் தலைவராக நிரூப்பும். கிராமத்திற்குத் தலைவராக அக்ஷராவும் உள்ளனர். இரண்டு பேரின் அணியிலும் சுமார் 7 நபர்கள் பிரித்துக் கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டில் இன்று (அக்.27) என்னென்ன கலவரங்கள் வெடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ABOUT THE AUTHOR

...view details