பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பிக்பாஸ் நான்காவது சீசன் தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது, பிக்பாஸ் ஐந்தாவது சீசன் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கான புரோமோ ஷூட் நேற்று (ஆகஸ்ட் 24) சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
வழக்கம்போல் இந்தச் சீசனையும் கமல் ஹசன் தொகுத்து வழங்குகிறார் என்பது புரோமோ மூலம் தெரிகிறது. முன்னதாக பிக்பாஸ் ஐந்தாவது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகப் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லீக்கான கமல் ஹாசன் புகைப்படம் மேலும் வரும் செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி நாளன்று பிக்பாஸ் 5ஆவது சீசனுக்கான புரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் டிக் டாக் பிரபலம் ஜி.பி. முத்து, நடிகர் ஜான் விஜய், ஷகிலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, பாபா பாஸ்கர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.