பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 104 நாள்களைக் கடந்து இன்று இறுதி நாளை எட்டியுள்ளது.
இறுதியாகப் பாவனி, நிரூப், ராஜு, பிரியங்கா, அமீர் ஆகியோர் இறுதிக்கட்டத்தில் உள்ளனர். இதில் வைல்டு கார்டாக வந்த அமீர், 'Ticket to Finalae' வென்று முதல் நபராக இறுதி வாரத்திற்குள் நுழைந்தார்.
இந்நிலையில் தீப்பொறி, ஆட்டம் பாட்டத்துடன் பிக்பாஸ் ஃபைனல்ஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது.
இதில் நாடியா சாங், சின்னப்பொண்ணு, ஐக்கி, தாமரை, சிபி, அக்ஷரா, வருண், இசைவாணி, அபினய், சஞ்சீவ், ஸ்ருதி ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இமான் அண்ணாச்சி, நமீதா மாரிமுத்து, அபிஷேக், மதுமிதா ஆகியோர் கரோனா பரவல் காரணமாக கலந்து கொள்ளவில்லை என கமல்ஹாசன் கூறினார்.
பிறகு ஒருவர் பின் ஒருவராக, தங்களுக்குக் கிடைத்த பட வாய்ப்புகள் குறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்புகள் குறித்தும் தெரிவித்தனர். இதில் யார் வின்னர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் தருணங்கள், விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதையும் படிங்க:Bigg Boss 5: எதிர்பாராததை எதிர்பாருங்கள்... டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றவர் யார்?