தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக்பாஸில் 2ஆவது நாளே அழுகாச்சியா.... புலம்பும் ரசிகர்கள் - பிக் பாஸ் சீசன் 5

பிக்பாஸ் 5 ஆவது சீசன் தொடங்கிய இரண்டாவது நாளே போட்டியாளர்களுக்கு அழுகும் டாஸ்க் கொடுக்கப்பட்டது, ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இசைவாணி
இசைவாணி

By

Published : Oct 5, 2021, 3:10 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துவருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஐந்தாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) தொடங்கியது. நேற்று (அக்.2) முதல்நாள் என்பதால் போட்டியாளர்களிடையே கலவரம், டாஸ்க் என்று எதுவும் கொடுக்காமல் பிக்பாஸ் வேடிக்கை மட்டும் பார்த்தார்.

உண்மையான டாஸ்க் இன்று (அக்.5) முதல் தொடங்குகிறது. முதலாவதாகப் போட்டியாளர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டியாளர் இசைவாணி, தான் கடந்துவந்த சோகமான பாதைகளைப் பற்றி சக போட்டியாளரிடம் கண்ணீர் மல்க கூறுகிறார். இது குறித்து வெளியான ப்ரோமோவில், "எனக்கு ஒருவேளை சாப்பாடு சாப்பிடுவதற்கே சிரமம்.

விதவிதமான உடையணிய ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் செய்ய முடியவில்லை" எனக் கூறினார். இவரின் கதையைக் கேட்டு மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் வடிப்பது போல் ப்ரோமோ முடிக்கிறது. இதனைக் கண்ட ரசிகர்கள், பிக்பாஸ் தொடங்கிய இரண்டாவது நாளே அழுகாச்சியா எனப் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க:ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி: படப்பிடிப்பு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details