தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருந்தார்.
மாஸ்டர் படத்திலிருந்து 'வாத்தி கம்மிங் ஒத்து' என்ற பாடல் வெளியானது. 'பெரட்டி விடு செதற விடு' பிஜிஎம்க்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு கையை மட்டும் அசைக்கும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இந்த நடன சேலஞ்சை ஏற்றுக்கொண்டு நீங்களும் உங்களது வீடியோக்களை பதிவிடுங்கள் என்று பதிவிட்டார்.
இவரின் இந்தச் சேலஞ்சை பலரும் ஏற்று தங்களது நடன வீடியோவை பதிவிட்டிருந்தனர். மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனுவும், தனது மனைவி கிகியுடன் அவர்கள் நடத்திவரும் நடனம் பயிலும் மாணவர்களும் நடனமாடி அசத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து பாவனா தனது தோழி ஒருவருடன் வாத்தி கம்மிங் பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடியுள்ளார்.
பரதம் ஆடிய வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோவை ரசிகர்கள் ஆர்வமுடன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துவருகின்றனர். சமீபத்தில் பாவனா இசையமைப்பாளர் அனிருத்தின் பெண் வெர்ஷன் என இருவரின் உருவ அமைப்பை நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.