டிசி காமிக்ஸின் முக்கிய பெண் சூப்பர் ஹீரோவான 'பேட்வுமன்' முதன்முதலில் 1950களில் பேட்மேனின் காதலியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும். 2006ஆம் ஆண்டு முதலே இந்த கதாபாத்திரம் காமிக்ஸில் தனி சூப்பர் ஹீரோவாக உள்ளது. காமிக்ஸில் தன்பால் ஈர்ப்பாளாராக 'பேட்வுமன்' வடிவமைக்கப்பட்டிருந்தது.
முதல் தன்பால் ஈர்ப்பாளர் சூப்பர் ஹீரோவான 'பேட்வுமன்' - ரூபி ரோஸ்
பிரபல டிசி சூப்பர் ஹீரோவான ‘பேட்வுமன்’, உலகின் முதல் தன்பால் ஈர்ப்பாளர் சூப்பர் ஹீரோ தொடராக உருவாகிவருகிறது.
இந்நிலையில் 'பேட்வுமன்' சூப்பர் ஹீரோவை மையமாக வைத்து அமெரிக்காவில் புதிதாக தொலைக்காட்சி தொடர் ஒன்று உருவாகிவருகிறது. 2019-20ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ள இந்தத் தொலைக்காட்சி தொடரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 32 வயதான ரூபி ரோஸ் நடித்துவருகிறார். இவர் வெளிப்படையாக தன்னை ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்வுமன் சூப்பர் ஹீரோ முதல்முதலாக வரும் டிசம்பர் மாதம் டிசி காமிக்ஸின் மற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களான ஏரோ, தி ஃபிளாஸ், சூப்பர் கேர்ள் ஆகியோருடன் தோன்றவுள்ளார்.