தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’பிக்பாஸ் 4’- வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா - biggboss tamil

சென்னை: ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா நுழைந்துள்ளார்.

அர்ச்சனா
அர்ச்சனா

By

Published : Oct 15, 2020, 12:07 PM IST

’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 11 நாள் ஆகியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) 16 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார். ஆனால் அதற்குள் ஒருவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், பாடல் ஒலிக்க தொகுப்பாளர் அர்ச்சனா என்ட்ரி கொடுக்கிறார். அவரைப் பார்த்தவுடன் மற்ற போட்டியாளர்கள் ஆடிப்பாடி கொண்டாடி வரவேற்பதுபோல் ப்ரோமோ வீடியோ முடிகிறது. ஏற்கனவே அர்ச்சனா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. முதலில் அவர் வரவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாகத் தொகுப்பாளர் அர்ச்சனா கலகலப்பாகப் பேசுபவர் என்பதால், இன்றைய நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழில் வெளியாகும் மகேஷ் பாபுவின் ஹிட் திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details