இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா 'ரப் நே பனா தி ஜோடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். ஷாரூக் கான் நடிப்பில் வெளியான 'ஜீரோ' படத்திற்கு பின் புதுப்படங்களில் கமிட் ஆகாமல் அனுஷ்கா கணவர் விராட் கோலியுடன் நேரம் செலவழித்து வருகிறார்.
தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அனுஷ்கா கோலிக்கு முடி வெட்டிய வீடியோ சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகியது. இதனையடுத்து கரோனா தடுப்பு நிதிக்கும் இருவரும் நிதி திரட்டி வருகின்றனர்.
தொடர்ந்து அனுஷ்கா ஷர்மா நடிப்பில் ஒளிபரப்பப்பட இருக்கும் வலைத் தொடரின் டீஸரை தற்போது தனது சமூக வலைத்தளப்பக்கதில் வெளியிட்டுள்ளார்.
NH10 எழுத்தாளர் சுதீப் ஷர்மா புலனாய்வு தொடராக இதனை இயக்கியுள்ளார். க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த வலைத் தொடரில் ஜெய்தீப் அஹ்லாவத், நீரஜ் கபிஸ குல் பனாக், ஸ்வஸ்திகா முகர்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அனுஷ்கா வெளியிட்டுள்ள டீசர் க்ளிப்பில், நிலத்திற்கான சட்டங்கள் மாறுவதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. புழுக்களாக இது நுழைந்து இறுதியில் பயங்கரவாதத்தை பரப்பிவிட்டது. இந்த உலக வாழ்க்கையை நரகமாக்கி விட்டது என்று டீசரின் பின்னணியில் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் இந்த வலைத் தொடர் ஒளிப்பரப்ப பட உள்ளது.