தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’என்னை யாருடனும் கம்பேர் செய்யாதீர்கள்’ - கதறும் அனிதா சம்பத்! - பிக்பாஸ் 4 ப்ரோமோ

சென்னை: ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் தன்னை யாருடனும் கம்பேர் செய்ய வேண்டாம் என்று கதறி அழுதபடி அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.

அனிதா
அனிதா

By

Published : Oct 8, 2020, 11:33 AM IST

’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்தவந்த பாதைகள், அனுபவித்த வலியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை வேல்முருகன், நிஷா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து இன்றைக்கான எப்சோட்டில் அனிதா சம்பத் தான் கடந்துவந்த பாதை குறித்து விவரிக்கிறார். அதில், “எனக்கு அட்ரஸ் என்பதே கிடையாது. நமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்று பல தடவை யோசித்து இருக்கிறேன். என் வீட்டில் நான்தான் பெற்றோர் மாதிரி. அப்பா, அம்மா, தம்பி எனக்கு குழந்தை மாதிரி” என்றார்.

தொடர்ந்து சக போட்டியாளர்களிடம் பேசும்போது, ‘நான் ரொம்ப சிரமப்பட்டு என்னுடைய பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதைக் கெடுத்துகொள்ள விரும்பவில்லை. அதனால் என்னை யாருடனும் கம்பேர் செய்யாதீர்கள்” என்று கதறி அழுதுகொண்டே பேசுவதோடு ப்ரோமோ முடிகிறது.

இதையும் படிங்க:சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்! - பாரதிராஜா வேதனை

ABOUT THE AUTHOR

...view details