தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2019, 9:43 PM IST

Updated : Nov 9, 2019, 10:25 PM IST

ETV Bharat / sitara

உங்களை வாழ்த்த பல காரணங்கள் இருக்கு - 'கோடீஸ்வரி' ராதிகாவை வாழ்த்திய 'பாலிவுட் பிக் பி'

நீங்கள் கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறீர்கள் என்பதையும் தாண்டி உங்களை வாழ்த்த பல காரணங்கள் இருக்கின்றன.

Kodeeswari

சென்னை: கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் ராதிகாவுக்கு பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட நடிகை ராதிகா சரத்குமார், தனது நடிப்பாற்றலை திரைப்படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நிரூபித்து காட்டிவருகிறார். அதற்கு அவர் நடித்த 20 ஆண்டுகால தொலைக்காட்சி தொடர்களே சாட்சி. சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி உள்பட பல தொடர்கள் தமிழ் மக்களை கவர்ந்தன.

ராதிகா நடித்த 'வாணி ராணி' தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் 'கோடீஸ்வரி' என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ராதிகா பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி பிரத்யேகமாக பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதன் தயாரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இதனையடுத்து தமிழில், 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற பிரபலமான நிகழ்ச்சியானது, இந்தியில் 'கோன் பனேகா குரோர்பதி' என்ற நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்.

அவர் ராதிகாவை வாழ்த்தும் காணொலி தற்போது இனணயத்தில் வைரலாகியுள்ளது. அதில், "ராதிகாவுக்கு வணக்கம். அமிதாப்பச்சன் பேசுகிறேன். கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் உங்களோடு உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. திரைப்படங்களில் ஒரு சக நடிகனாக உங்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நீங்கள் கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகீறீர்கள் என்பதையும் தாண்டி உங்களை வாழ்த்த பல காரணங்கள் இருக்கின்றன.

கோன் பனேகா குரோர்பதி (KBC) வரலாற்றில் நீங்கள்தான் முதன் பெண் தொகுப்பாளராக இருக்கப் போகிறீர்கள். இது இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச கே.பி.சி. நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கு பெறக்கூடிய இந்நிகழ்ச்சி தனித்துவமானது. இது பாராட்டுதலுக்கு உரியது. இது நிச்சயம் பெண்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். உங்களுக்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Last Updated : Nov 9, 2019, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details