பல்வேறு மாநிலங்களில் பல பெயர்களுடன் புத்தாண்டை மக்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், வீட்டில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் புதிய படங்களைக் கண்டு மகிழுமாறு பிரபல முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரம் தெரிவித்துள்ளது. அதன்படி ஐந்து புதிய படங்களை ஸ்ட்ரீம் செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜோஜி (மலையாளம்)
'சி யூ சூன்' படத்தின் மூலம் ஓடிடி தளத்தில் தனது தடத்தைப் பதித்த பஹத் பாசில் தற்போது 'ஜோஜி' மூலம் மீண்டும் ஓடிடி தளத்துக்கு வந்திருக்கிறார். 'ஜோஜி', க்ரைம் ட்ராமா வகையைச் சேர்ந்த மலையாளத் திரைப்படம்.
இப்படத்தை திலீஷ் போத்தன் இயக்கியுள்ளார். படத்தில் பாபுராஜ், ஷமி திலகன், பாஸில் ஜோசப் ஆகியோர் நடித்துள்ளனர். நாடகத் தந்தை ஷேக்ஸ்பியரின் 'மேக்பெத்' நாடகத்தால் ஈர்க்கப்பட்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
மெய்சிலிர்க்கவைக்கும் ஒளிப்பதிவு, நாடி நரம்புகளை உறையவைக்கும் புதிர்கள் உங்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துவந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. 2021 ஏப்ரல் 9இல் வெளியான இத்திரைப்படத்தை நீங்கள் பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் காணொலியில் காணலாம்.
ஜதி ரத்னலு (தெலுங்கு)
நகைச்சுவையும், கதை வசனமும் உங்களை ஆர்ப்பரிக்கவைக்கும். அனுதீப் கே.வி. எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா, ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் முழுவதுமே கேலி, கூத்துக்குப் பஞ்சமிருக்காது.
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்விலும் மகிழ்ச்சியைத் தேடும் மூன்று ஆண்களைப் பற்றிய கதைதான் இது. வாழ்க்கையை மனதுக்குப் பிடித்ததுபோல் மகிழ்ச்சியாக வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற இலக்குடன் நகரத்துக்கு வரும் இந்த இளைஞர்கள் செய்யாத குற்றத்துக்காகச் சிறைக்குச் செல்கின்றனர்.
அதன்பின் நிகழ்வது எல்லாமே சிரிப்பு சர வெடியாக வெடிக்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வயிறு குலுங்க சிரித்து படத்தை ரசிப்பீர்கள்.
யுவரத்னா (கன்னடம், தெலுங்கு, தமிழ்)