தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்ஷய்குமார்! - Bear grylls

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய்குமார் பங்கேற்றுள்ளார்.

அக்ஷய்குமார்
அக்ஷய்குமார்

By

Published : Aug 21, 2020, 3:40 PM IST

காட்டுக்குள் சென்று எப்படி உயிர் வாழ்வது என்பது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மேன் vs வைல்ட். தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து நடிகர் அக்ஷய்குமார் பங்கேற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்ஷய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி டிஸ்கவரி பிளஸ் செயலிலும், செப்டம்பர் 14ஆம் தேதி டிஸ்கவரி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியைக் காண அக்ஷய்குமார் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details