ஹைதராபாத்:லண்டனிலுள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் ஏப்ரல் 10, 11 தேதிகளில் நடைபெறவிருக்கும் பாஃப்டா விருதை வெற்றியாளர்களுக்கு தானும் வழங்க இருப்பதாக பரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
சிட்டெல் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது லண்டனில் தங்கியுள்ளார். இதையடுத்து 74ஆவது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கத் தேர்வாகியிருப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டாரியில் பகிர்ந்துள்ள அவர், ”வரும் ஞாயிற்றுக்கிழமை பாஃப்டா விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்க இருப்பதில் ஆர்வமாக உள்ளேன். இதை மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்காவுடன் இணைந்து நடிகை ரோஸ் பைர்ன், ஆண்டரா டே, அனா கென்ட்ரிக், ரினீ ஸ்லேவீகெர் உள்ளிட்டோரும் விருதுகளை வழங்கவுள்ளனர். பிரியங்கா தவிர அனைவரும் லாஸ் ஏஞ்சலிஸிருந்து வீடியோ மூலம் இணையவுள்ளனர்.